அக்செஞ்சர், காக்னிஜென்ட் நிறுவனங்கள் மீது ஊழியர்கள் வழக்கு..! அடிமைத்தனமாக நடத்துவதாக புகார்!

அக்செஞ்சர், காக்னிஜென்ட். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக உள்ள நிறுவனங்கள் இது.


இந்நிறுவன ஊழியர்கள், தங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மீது நீண்ட வேலை நேரம், இன்சென்டிவ் நிறுத்தியது, விடுமுறை பாலிசி போன்ற காரணங்களுக்காக. வழக்கு பொது நல வழக்கு ஒன்றை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான குழு என்ற தனனார்வலர் குழுவும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர், 

மேலும் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நாட்டின் வெள்ளை காலர் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்செஞ்சர், காக்னிசண்ட், காஸ்பெக்ஸ் கார்பொரேஷன் என பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர்களை திரட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்

ஊழியர்களின் இந்த வழக்கை ஏற்றுள்ள நீதிமன்றம். அடுத்த நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க காக்னிசண்ட் மற்றும் அக்செஞ்சர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மட்டுமின்றி தெலுங்கானா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதனால் இந்த நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

1988 ஆம் ஆண்டின் ஆந்திர மாநில நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவன ஊழியர்களை வாரத்தில் 48 மணி நேரத்திற்கும் மேல் அல்லது ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யச் சொல்ல முடியாது என்று கூறுகிறது.

மேலும் வாரத்திற்கு 6 மணிநேரமும், வருடத்தில் 24 மணி நேரமும் மட்டுமே கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்க முடியும் என்கிறது இந்த சட்டம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு வருடத்தில் 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, 12 நாட்கள் சாதாரண விடுப்பு, மற்றும் 12 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும் என கூறுகிறது.

ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் மாநிலத்தில் அமைக்க ஊக்குவிக்கும் பொருட்டு, ஐ.டி நிறுவனங்களுக்கு இந்த தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என மொத்தம் 6 பிரிவுகளை ஒதுக்கிவிட்டு, அப்போதைய ஆந்திர மாநில அரசு 2002 ஆம் ஆண்டில் ஒரு ஆணையை நிறைவேற்றியது, 

அவற்றில் அலுவலக திறப்பு மற்றும் மூடும் நேரம், தினசரி மற்றும் வார வேலை நேரம், விடுமுறைகள் மற்றும் சேவையை நிறுத்தும்போது ஒரு பணியாளரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும்.

மேலும் மற்றொரு சுவாரஸ்யமான சட்ட திருத்தம் ஒன்றையும் கொண்டு வந்தது ஆந்திர அரசு. அதாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாநில நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டத்தை மீறினால் ரூ .100 அபராதம் வரை விதிக்க முடியும் என்று கூறுகிறது. 

ஆயிரக்கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மென்பொருள் நிறுவனங்களை தங்கள் மாநிலத்தில் தக்கவைத்துக்கொள்ள அரசு செய்துள்ள மிகப்பெரிய ஒத்துழைப்பு இது என்கின்றனர் வழக்கு தொடுத்துள்ள ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் விஜய் கோபால்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான இந்த வழக்கு தொடர்பான கூடுதல் செய்திகள். மற்றும் தெலுங்கானா அரசின் அணுகுமுறைகள் இன்னும் சற்று சுவாரஸ்யமான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி