சேலத்தில் பெண் கையில் பணத்தை திணித்த எடப்பாடி! வைரல் வீடியோவின் பரபரப்பு பின்னணி!

சேலத்தில் பெண் கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணத்தை கையில் திணித்தது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இதனை முன்னிட்டு நேற்று சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று காலை சேலம் மாநகர் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று அவர் பொதுமக்களை சந்தித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. அதில் பெண்மணி ஒருவர் இடம் வாக்கு சேகரிப்பதற்கான துண்டு சீட்டை கொடுத்து விட்டு பக்கத்தில் இருப்பவரிடம் பணத்தை வாங்கி அந்தப் பெண்மணியின் கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெறிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாக அதிமுகவினர் வாக்காளர்களுக்கு நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்தப் பெண்மணிக்கு காசு கொடுத்து அதற்கான காரணம் ஏன் என்பது தெரியவந்துள்ளது. சேலத்தில் பல கடை வைத்திருக்கும் அந்தப் பெண்மணியின் கடைக்குச் சென்று முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது கடையில் இருந்த வாழைப்பழத்தை பார்த்து தனது பிடித்திருப்பதாகவும் அதனை தனக்குத் தருமாறு கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து அந்தப் பழத்தை எடுத்து பெண்மணி முதலமைச்சரிடம் கொடுத்துள்ளார்.

அந்தப் படத்திற்கான பணமாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பெண்மணியிடம் கொடுத்துள்ளார். இதில் வாழைப்பழம் வாங்கும் காட்சியை மட்டும் நறுக்கி தூக்கி எறிந்து விட்டு பணத்தை கொடுக்கும் காட்சியை மட்டும் திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழைப்பழம் வாங்குவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.