மனைவியுடன் உற்ற நண்பன் பாலியல் உறவு! நேரில் பார்த்த கணவன் செய்த தரமான சம்பவம்!

சென்னை அருகே மனைவியுடன் படுக்கையில் இருந்த உற்ற நண்பனை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளான்.


கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய நண்பர் ஜெகன். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். இதனால் ஜெகனை நாகராஜ் தனது வீட்டிற்கே அடிக்கடி அழைத்து வருவார்.

நாகராஜின் மனைவி மாலதி அண்ணா என்று ஜெகனுடன் பாசமாக பழகியுள்ளார். இருவரும் சகோதர – சகோதரியாக பழகுவதாக நினைத்து நாகராஜ் அதற்கு அனுமதித்துள்ளார். இதனால் நாகராஜ் இல்லாத சமயத்திலும் அடிக்கடி ஜெகன் மாலதியை சந்தித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் வேலை சீக்கிரம் முடியவே நாகராஜ் திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ஜெகனுடன் – மாலதி உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்துவிட்டு பார்க்காதது போல் வெளியே சென்றுவிட்டார் நாகராஜ்.

கடந்த 1ம் தேதி ஜெகனையும், மற்றொரு நண்பரான மாரிமுத்து என்பவரையும் மது அருந்த கோவளம் அடுத்த திருவிடந்தை கடற்கரைக்கு நாகராஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜெகனுக்கு போதை ஏறியதும் கத்தியால் சதக் சதக் என குத்தியுள்ளார் நாகராஜ்.

சகோதரி போல் பழகி தனது மனைவியை கள்ளக்காதலி ஆக்கியதால் இப்படி கொலை செய்ததாக கூறிவிட்டு நாகராஜ் தப்பியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.