தினமும் ஒரு முறை செக்ஸ்! உலகமகா பணக்காரரின் சக்சஸ் சீக்ரெட்!

வாரத்தின் ஏழு நாட்களில் 6 நாட்கள் தினசரி ஒரு முறை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு தனது ஊழியர்களுக்கு அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் மா அதிரடியான ஆலோசனை வழங்கியுள்ளார்.


உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் இவர். அது மட்டுமல்லாமல் உலக மகா பணக்காரர்களில் ஜாக் மாவும் ஒருவர்.

பெய்ஜிங்கில் அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஜாக் மா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அலிபாபா நிறுவன ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் உடல் புத்துணர்வு பெற்று உழைப்பில் ஆர்வம் காட்ட முடியும் என்று ஜாக் மா கூறினார்.

ஜாக் மாவின் இந்த அறிவுறுத்தலை கேட்டு அலிபாபா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னர் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி அதிர வைத்தார் இவர். இந்த நிலையில் தினமும் ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கூறியது அவர்களை பீதியடையச் செய்தது.

என்றால் தினசரி 12 மணி நேரம் உழைத்து விட்டு பிறகு உடலுறவில் ஈடுபட யாரிடம் அன்பு இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே பொதுக்குழு கூட்டத்தில் இருந்து விடை பெற்றனர் அலிபாபா நிறுவன ஊழியர்கள். ஜாக் மா கூறியது சரியான ஆலோசனை இல்லை என்று மருத்துவர்களும் மனோதத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.