உருவத்தை மாற்றும் கொரோனா! தாமதமாகும் அறிகுறிகள்! மனித உயிர்களுக்கு அதிகமாகும் ஆபத்து!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது தனது உருவத்தை மாற்றி வருவதுடன் அறிகுறிகளை வெளிப்படுத்தவும் அதிக நாட்களை எடுத்துக் கொள்வதால் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது.


 சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரஸ். இதற்கு கோவிட் 19 நோய் என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. சீனாவின் வூகானில் முதன் முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் தாக்கினால் மனிதர்களுக்கு சளி, இருமல், தும்மல், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

பொதுவாக மனிதர்களின் தொண்டையில் இருந்து தாக்குதலை ஆரம்பிக்கும் கொரோனா வைரஸ் முதலில் மனிதர்களின் சுவாச உறுப்புகளை செயல் இழக்கச் செய்யும் கொடும் தன்மை வாய்ந்தது. அதன் பிறகு மனிதர்களின் மற்ற உறுப்புகளையும் செயல் இழக்க வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் பேராபத்து மிக்கது.

முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள், நாட்பட்ட நோய் உடையவர்கள், சுவாசம் தொடர்பான நோய் கொண்டவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை அதிகம் எதிர்கொண்டனர். இத்தகையை கொரோனா வைரஸின் தன்மை மனிதர்களுக்கு பொதுவாக 14 நாட்களுக்குள் தென்பட்டது.

அதாவது சீனாவின் வூகான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களில் வெளிப்பட 14 நாட்கள் தேவைப்பட்டது. அதாவது ஒரு நபர் கொரோனா வைரஸின் தொடர்புகளுடன் தன்னை தொடர்பு படுத்தினால் அடுத்த 14 நாட்களுக்குள் அந்த நபருக்கும் கொரோனா பரவும். அதாவது ஒரு மனித உடலில் கொரோனா தன்னை உயிர்பிக்க அதிகபட்சம் 14 நாட்கள் தேவை.

இதனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் 14 நாட்களுக்குள் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். அதாவது அவர்களுக்கு சளி, இருமல், தும்மல் போன்று ஏதாவது ஒரு அறிகுறி தென்படும். இந்த நிலையில் சீனாவின் வூகானில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் சீனாவின் வடக்கு பகுதி மாநிலங்களான Jilin and Heilongjiangஆகியவற்றில் கொரோனாவின் புதிய கிளஸ்டர் உருவாகியுள்ளது. இங்கு உருவாகும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் வூகானில் தென்பட்டது போல் 14 நாட்களில் தென்படவில்லை.

கொரோனாவால் தாக்கப்பட்டு 14 நாட்கள் கடந்து அதன் பிறகு அதிகபட்சம் 2 வாரங்களுக்கு பிறகு கூட வைரஸ் அங்கு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. மேலும் தன்னை மனித உடலில் வளர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் சீனாவின் வூகானை காட்டிலும் Jilin and Heilongjiang பகுதி கொரோனா வைரஸ் தனது உருவத்தை மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் 14 நாட்களில் அறிகுறி தென்படவில்லை என்று கருதி வீட்டிற்கு அனுப்பப்படும நோயாளிகள் உண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்களின் குடும்பத்தாருக்கும் கொரோனாவை பரவச் செய்துள்ளனர். எனவே இப்படி உருவத்தை மாற்றும் கொரோனாவால் உயிர்களுக்கு அதிக ஆபத்து என்று எச்சரிக்கின்றனர் சீன மருத்துவர்கள்.