உடலில் உட்காரும் இடம் முழுவதும் ஊசிகளுடன் வாழ்ந்த விநோத மனிதன்! எக்ஸ்ரேவில் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

சைனா ஷாங்ஷா பகுதியை சேர்ந்த 55 வயதான சென் என்பவருக்கு நீண்ட நாட்களாக பின்புற தசைப்பகுதிகளில் கூச்சம் ஏற்பட்டு வந்துள்ளது.


அப்பொழுது அதனை சாதாரணமாக விட்டுவிட்டார். இதையடுத்து அவர் ஓடும் பொழுது குனியும் பொழுது அதிக வேலை பார்க்கும் பொழுது பயங்கர வலி பின்புற தசையில் ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதன் தீவிரத்தைப் புரிந்து மருத்துவரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்.

மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அதில் அவரது பின்புறத்தில் 8 குண்டூசிகள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடந்ததைக் கூறி அது எப்படி உள்ளே சென்றது இதற்கு முன்பு ஏதேனும் விபத்து ஏதேனும் நடந்ததா என்ற கேள்வியைக் கேட்டனர்.

அதற்கு சென், பத்து வருடங்களுக்கு முன்பு தான் ஒரு உலோக குழி ஒன்றில் தவறி விழுந்ததாகவும் அதில் தனக்கு அதிக காயம் ஏற்பட்டதாகவும் கூறினார் அந்த இடம் முழுவதும் ஊசிகளும் உலோகங்களும் நிறைந்ததாக குறிப்பிட்டு அவர் அதில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று தெரிவித்தார்

இதையடுத்து தாமதப்படுத்தாமல் நான்கு மணி நேரத்திற்கும் மேல் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குண்டுகளையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர் நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.