செல்போனில் பிசியான அப்பா! கிச்சனில் அம்மா! குளியல் அறையில் இருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!

திருவள்ளூர்: அம்மா, அப்பா சரியான அக்கறை காட்டாத காரணத்தால், பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


திருவள்ளூர் மாவட்டம், வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் அருண் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று (ஆகஸ்ட் 14) குழந்தையை குளிக்க வைப்பதற்காக, பாத்ரூம் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பியுள்ளார். குழந்தையை குளிக்க வைக்க தயார்படுத்தியபோது,  முருகனுக்கு செல்ஃபோன் அழைப்பு வந்துள்ளது.

ஃபோனை எடுப்பதற்காக, முருகன் நகரவே, தண்ணீர் பக்கெட் கவிழ்ந்து, குழந்தை மீது மொத்த நீரும் கொட்டியுள்ளது. இதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

முருகனின் மனைவி சமையல் வேலையில் இருந்ததால் உதவிக்கு ஆள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் முருகனே ஓடிவந்து குழந்தையை பார்த்தபோது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளது- உடனடியாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. 

இப்படியாக, சமையல் வேலையில் தாயும், செல்ஃபோன் பேசியபடி தந்தையும் இருக்கவே, குழந்தை பரிதாபமாக உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.