தூக்கி வீசப்பட்டு பலியான சிறுவன்! மின் கம்பம் கீழே நின்றவனுக்கு விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மின் கம்பம் பழுதடைந்த நிலையில் இதனை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை புகார் அளித்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மின் ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் மின் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


அரக்கோணம் பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள பழுதடைந்த மின் கம்பத்தில் அடியில் சென்றுள்ளார் அப்போது மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக அறையில் உள்ள மின் ஒயரை மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது .

இதையடுத்து ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டித்து சுமார் 100க்கும்மேற்பட்டோர் அரக்கோணம் திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றது.