குளிக்க வரும் போது டிரஸ் கம்மியா போட்ருப்பாளுங்க..! அப்படியே புதருக்குள்ள தூக்கிட்டு போய்டுவோம்ஸ! தாமிரபரணி ஆற்றங்கரை பகீர்!

நெல்லை மாவட்டத்தில் ஆற்றில் குளிக்கச் செல்லும் மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் தனியாக குளிக்க வரும் சிறுமிகளை அங்குள்ள இளைஞர்கள் சிலர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. பாதிக்கப்படும் சிறுமிகளும், பெற்றோர்களும் இதை வெளியில் சொன்னால் அவமானமாக கருதி யாரிடமும் சொல்லாமலேயே புழுங்கி வந்துள்ளனர்.

இதனால் இளைஞர்களும் தைரியமாக ஆற்றுக்கு அருகில் உள்ள புதரில் முகாமிட்டு தனியாக வரும் சிறுமிகளை நோட்டமிடுவது வழக்கம். ஒன்று அல்லது 2 சிறுமிகள் மட்டும் வந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு சென்று முட்புதரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனmர் 

இதேபோல் கடந்த 16ம் தேதி அம்பை பகுதியை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தபோது இளைஞர்கள் சிலர் அவர்களிடம் பேசி மயக்கி புதர் அருகே அழைத்து சென்று அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறுமிகள் நீண்ட நேரம் ஆகியும் வீட திரும்பாமல் இருந்ததால் தேடி சென்ற பெற்றோர் பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

அவர்களும் விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என அமைதியாக இருந்துவிட்டனர். இந்த விஷயம் கேள்விப்பட்ட தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகி ராஜம்மாள் என்பவர் அம்பை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊர்காட்டை சேர்ந்த மூர்த்தி, மாரியப்பன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது போலீஸ்.