ஸ்டாலினின் குறுக்குவழிக்கு தடை போட்ட எடப்பாடி பழனிசாமி. தடுமாறும் தி.மு.க.வினர்.

கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் கிராமத்து மக்களை ஏமாற்றும் தி.மு.க.வின் செயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைச்சிட்டார். அதாவது அரசு நடத்தும் விழாவைப் போன்று கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் தி.மு.க. பிரசாரம் கூட்டம்தான் நடத்துகிறது. இங்கு மக்களுடைய குறைகளைக் கேட்காமல், வெறுமனே தேர்தல் பிரசாரம்தான் நடக்கிறது.


இப்படி மக்களை ஏமாற்றும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடத்தக்கூடாதுன்னுதான் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை இது. 

’கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும், கிராம சபைகள் அந்த ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை. இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல அந்த அமைப்பை நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது, எனவே அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்கிறது.

 இந்த அறிவிப்பை அடுத்து, 'மக்கள் கிராமசபைக் கூட்டம்' என்ற பெயரில் தி.மு.க. அடுத்தகட்ட பிரசாரத்தை தொடங்கினாலும், எப்படிப் போனாலும் தடையைப் போடுறாரே என்று புலம்பிவருகின்றனர்.