அதிவேகம்..! நேருக்கு நேர் மோதி நொறுங்கிய 2 ஆம்னி பஸ்கள்..! துடிதுடித்த 40 பேர்! அதிர வைத்த விபத்து!

கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு 40 பேர் படுகாயம்


சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் ஆம்னி பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே விபத்திற்குள்ளானதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தன. மேலும், பேருந்தில் இருந்த 40 பேர் படுகாயம் அடைந்தனர். 

சென்னையில் இருந்து கோவை நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று நள்ளிரவு புறப்பட்டது சென்று கொண்டு இருந்தது தனியார் ஆம்னி பேருந்து. இந்நிலையில், இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேர்ந்தநாடு குறுக்கு சாலையில் ஆம்னி பேருந்து சாலையை கடக்க முயன்ற போது கோவையிலிருந்து சென்னை நோக்கி மற்றொரு ஆம்னி பேருந்து வந்தது.

இதனை அறியாத சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 இளைஞசர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தன. மேலும், பேருந்தில் இருந்த 40 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதற்கிடையில், தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விபத்து குறித்து புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதிகள் மிகவும் அதிகளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.