ஹாட்ட்ரிக் சிக்ஸ் அடித்து சேப்பாக்கத்தை அதிரவைத்த தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 175 ரன்களை எடுத்துள்ளது.


முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கஆட்டக்காரர்கள் ராயுடு வந்த வேகத்தில் அவுட் ஆனார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் இல்லாதது போல இருந்ததால் சென்னை அணி பொறுமையாக ஆடியது. வாட்சன் 13 ரன்களுக்கும் , ஜாதவ் 8 ரன்களுக்கும் வெளியேற சென்னை அணி ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர் ரெய்னா வுடன் இனைந்து தோனி சென்னை அணியின் ரன்னை பொறுமையாக உயர்த்தினர். சுரேஷ் ரெய்னா 36 ரன்களுக்கு வெளியேற, களமிறங்கிய பிராவோ , தோணியுடன் இனைந்து அதிரடியில் இறங்கினா5ர்.பிராவோ 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் , தல தோனி ராஜஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

கடைசி ஒவேரில் கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸ் அடித்து அரங்கயே அதிர வைத்தார். சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.