டைரக்டர்கள் ஏமாத்திட்டாங்க..! சீரியல்ல இருந்து விலகுறேன்..! ஈரமான ரோஜாவே நிவிஷா ஷாக் தகவல்!

சென்னை: மன உளைச்சல் தருவதால் சீரியலில் இருந்து விலகப் போவதாக நடிகை நிவிஷா தெரிவித்துள்ளார்.


ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களில், வில்லத்தனமான வேடத்தில் நடித்து வருபவர் நிவிஷா. சினிமா நடிகையாக அறிமுகமான இவர் தற்போது சீரியலில் முழு மூச்சில் நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பு அனுபவம் பற்றி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ''எனது குடும்பம் மிகவும் பாரம்பரியமானதாகும்.

அவர்களுக்கு நான் சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும், என் விருப்பத்தின் பேரில்தான் நடித்து வருகிறேன். இருந்தாலும், எனக்கு பாசிடிவ் கதாபாத்திரங்களை தராமல், நெகடிவ் வாய்ப்புகள்தான் தருகிறார்கள். ஒப்பந்தம் ஆகும்போது நல்ல கதாபாத்திரம் எனச் சொல்லிவிட்டு, போகப் போக அதனை நெகடிவ் ஆக மாற்றிவிட்டனர்.

ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்களின் இயக்குனர்கள் என்னை இப்படி ஏமாற்றி மன உளைச்சல் அளித்துவிட்டனர். நான் பயங்கர வில்லியாக நடிப்பதை என் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கிறார்கள். எனவே, விரைவில் இந்த சீரியல்களில் இருந்து விலகப் போகிறேன். இனி, பாசிடிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.