நள்ளிரவு..! பூதம் போன்ற தோற்றம்..! இடுப்பில் ஆயுதங்கள்..! சென்னையை கலக்கும் ஜட்டி மனிதன்!

சென்னை போரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் திசை திருப்பி வைத்தது ஒரு திருடன் என தெரியவந்துள்ளது.


சென்னை போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் இரவு நேரத்தில் மர்மநபர்களால் திசை திருப்பி வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது வீடுகளை நோட்டம் இடுவதற்காகவும், கொள்ளை அடிப்பதற்காகவும் ஒரு திருடன் கேமிராக்களை திசை திருப்பி வைத்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்படி நோட்டமிடும் கொள்ளையன் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையன் ஒருவன் திருடும் நோக்கில் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று வெளிப்புறத்தில் நோட்டமிடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.

பனியன் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கும் கொள்ளையன் முகத்தை மறைத்திருக்கிறான். கையில் டார்ச் லைட் மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிகிறான். கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் அப்பகுதியினர் கவனத்துடன் இருக்கும் படியும் இரவில் வேலையை விட்டு வீட்டுக்கு வருபவர்கள் அவனை கண்டால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.