உல்லாசமா இருந்தோம்! திடீர்னு சாந்தியோட கணவர் வந்துட்டார்! அதான்..! நிர்வாணமாக ஓடிய இளைஞன் பகீர் தகவல்!

சென்னை கொடுங்கையூரில் நள்ளிரவில் ஒரு நபர் நிர்வாணமாக ஓடியதாக கூறப்பட்ட சம்பவத்தில் அவர் கள்ளக்காதலி வீட்டில் இருந்து ஓடியது தெரியவந்துள்ளது.


சென்னை கொடுங்கையூரில் நள்ளிரவில் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரிவதாக கடந்த வாரம் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் அந்த நபர் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே அவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் குழுக்களில் வைரலானது.

இதற்கிடையே அந்த நள்ளிரவில் ஓடியது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சொன்ன தகவல்கள் போலீசாரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால் அந்த நபர் திருடுவதற்காகவோ, மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவோ நள்ளிரவில் நிர்வாணமாக ஓடவில்லை. அவருக்கு பழக்கமான கள்ளக்காதலி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்க, கள்ளக்காதலியின் கணவர்தான் வந்துவிட்டா என நினைத்து வீட்டின் பின்வாசல் வழியே ஓடினார். பதற்றத்தில் ஆடைகள் கூட எடுத்து வராமல் தப்பித்தால் போதும் என ஓடியுள்ளார். அந்த சம்பவத்தைத்தான் பொதுமக்கள் அன்று பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து யாரும் வரவில்லை என்பதை கள்ளக்காதலி உறுதிப்படுத்த மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து ஆடைகளை எடுத்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து அந்த இளைஞரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். உடலுறவு என்பதே பிரச்சனைகளை மறந்து சந்தோஷமாக இருப்பதற்காகத்தான். பயந்து பயந்து கள்ளக்காதலியிடம் உல்லாசமாக இருப்பதற்கு இது தேவையா என நெட்டிசன்கள் கேலி செய்தனர்.