எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன் பாஸ்கரன் நான்! அதிர வைக்கும் இளைஞனின் வீடியோ!

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரின் வாரிசு என கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த பாஸ்கர் என்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாஸ்கர் என்ற நபர் தனது பேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பல சர்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் பிறந்த வாரிசு என்றும் கூறி வீடியோ பதிவு ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சுமார் 16 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ பதிவில் நீதித்துறை சார்ந்த பல சர்ச்சையான கருத்துக்களையும் பேசி இருக்கிறார். இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி ஜெயபால் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீடியோ ஆதாரத்தை அனுப்பி புகார் அளித்திருந்தார்.  

உடனடியாக பாஸ்கர் என்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.