பஸ்ஸில் ஏறி ஆண்களை மிகவும் நெருங்கி! அங்கங்கே உரசி..! பானுவின் சேட்டைகள்! ஆனால்..?

சென்னையில் நூதன முறையில் ஆண்களை உசுப்பேற்றி திசை திருப்பிவிட்டு திருட்டு நடவடிக்கைகளில் கை வரிசைக்காட்டி வந்த திருட்டு ராணி கைது செய்யபட்டுள்ளார்.


சென்னை , திருவான்மியூர் பகுதியில் மருதீஷ்வரர் கோவில் சன்னிதானத்தில் கார்த்திகை தீப பூசையில் சாமி கும்பிட வந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய போது தான் இவரது குட்டு வெளியானது.

கோவிலில் கூட்ட நெரிசலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த மற்றொரு பெண்ணை இடித்து விட்டு யாரோ செல்போனை திருடியதாக அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்க, சுதாரித்து கொண்ட போலீசார் அங்கு சுற்றி திரிந்த பானுவை பிடித்து விசாரிக்க அவர் பதட்டத்தில் சேலையை நழுவ விட்டுள்ளார், பட படவென கீழே விழுந்து எல்லாம் வித விதமான செல்போன்கள். 

அதிர்ந்து போன போலீசார் அவரை அப்புறபடுத்தி மேலும்.விசாரணை செய்துள்ளனர் அப்போது தான் அவர் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று திரும்பிய பலே திருட்டு ராணி எனவும், இதை தான் தொழிலாக செய்து வந்துள்ளதும் மேலும், பேருந்துகளில் கூட ஆண்களை குறி வைத்து அவர்களை உரசி கிலு கிலுப்பை ஏற்ற அவர்கள் கிரங்க அவர்களது பர்ஸ், போன் என தனது கை வரிசையை காட்டியுள்ளதும் அம்பலமானது.