மனைவி பூவலட்சுமியுடன் சேர்ந்து அரங்கேற்றிய இரட்டைக் கொலை! ஆவடி சுரேஷ்குமாரின் பதற வைக்கும் பகீர் வாக்குமூலம்!

சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெகதீசன் – விலாசினி தம்பதி கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம் வேலையில்லாமல் கஷ்டபட்டவருக்கு உதவியதுதான் என்பது தெரியவந்துள்ளது.


சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெகதீசன் – விலாசினி தம்பதி வசித்து வந்தனர். ஜெகதீசன் அடிக்கடி கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அப்போது அங்கு அறிமுகமான சுரேஷ்குமார் என்பவர் ஜெகதீசனுடன் நட்பாக பழகி உள்ளார். மேலும் வேலை இல்லாமல் மனைவி, குழந்தையுடன் கஷ்டப்படுவதாக சுரேஷ்குமார் கூறியதால் ஜெகதீசனுக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து தன்னுடைய பண்ணை வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்து சுரேஷ்குமார் அவரது மனைவி பூவலட்சுமிக்கு வீட்டு வேலையும் தந்துள்ளார். ஜெகதீசன் நிறைய பணம் வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சுரேஷ்குமார் அவரை அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று ஓசியில் மதுவாங்கிக் கொடுத்துள்ளார்.

நாளடைவில் ஜெகதீசன் அதிமாக குடிப்பதை பார்த்த அவரது மனைவி விலாசினி சுரேஷ்குமாரை வேலையை விட்டு அனுப்பும்படி கூறியுள்ளார். இதற்கு ஜெகதீசனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.  

வேலையை விட்டு சென்றால் குடிக்க முடியாது என்பதால் ஜெகதீசனை அதிக அளவில் மதுபானம் குடிக்க வைத்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் சுரேஷ்குமார். அப்போது அங்கு வந்த ஜெகதீசன் மனைவி விலாசினியை இரும்புக் கம்பியால் அடித்து கொன்று சுரேஷ்குமார் பின்னர் ஜெகதீசனையும் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி பூவலட்சுமியுடன் சேர்ந்து நகைகள், பணத்துடன் தலைமறைவானார் சுரேஷ்குமார்.

2018ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. வழக்கை துரிதப்படுத்திய போலீசார் ஹரித்துவார் சென்று ஆட்டோ ஓட்டிவந்த சுரேஷ்குமார், மனைவி பூவலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். ஆந்திராவை சேர்ந்தவரான சுரேஷ்குமார் மீது விசாகப்பட்டினத்தில் பல வழக்கு நிலுவையில் உள்ளது.

அங்கு போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்து சென்னையில் தஞ்சமடைந்துள்ளார் சுரேஷ்குமார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களது 3 வயது குழந்தை பெற்றோரை இழந்து தவிக்கிறது.

மதுக்கடையில் கண்ணீர் விட்டவனை விசாரிக்காமல் வேலைக்கு சேர்த்த ஜெகதீசனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.