சென்னையில் அஞ்சப்பர் ஓட்டலை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்! பதற வைக்கும் காரணம்!

சென்னை போரூரில் செயல்பட்டு வந்த அஞ்சப்பர் உணவகத்திற்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


சென்னை போரூர் காவல் நிலையத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தது அஞ்சப்பர் உணவகம். பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த உணவகம் போரூரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் அஞ்சப்பர் ஓட்டலுக்கு சென்றனர்.

பிறகு அஞ்சப்பர் ஓட்டலை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி அஞ்சப்பர் உணவகத்தில் தரமற்ற வகையிலும் மோசமான முறையிலும் உணவு தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்ததாக கூறியுள்ளனர்.

தொடர் புகாரை தொடர்ந்து அதிகாரிகள் அஞ்சப்பர் உணவகத்தில் சென்று ஆய்வு செய்துள்ளனர் .அப்போது உணவு தயாரிக்கும் சமையல் அறை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கப்பட்டுவந்தது தெரியவந்தது.

மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் அசுத்தமாக இருந்துள்ளது. அத்துடன் உணவு தயாரிக்கும் பொருட்களில் பல காலாவதியானவையாக இருந்துள்ளன. உணவு தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாக உணவு தயாரித்து அஞ்சப்பர் விற்பனை செய்துள்ளது.

இதனை அடுத்தே போரூர் அஞ்சப்பர் உணவகத்தை மூடி சீல் வைத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் அஞ்சப்பர் உணவகங்களின் கிளை ஏராளமான உள்ளன. வெளிநாடுகளிலும் உள்ளன.

இந்த நிலையில் உணவின் தரம் சரியில்லை என்று கூறி அதிகாரிகள் சென்னை போரூரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். இதே போன்று மற்ற அஞ்சப்பர் கிளைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.