ஸ்கூலுக்கு போக ஆசைப்படுகிறாள்..! ஆனால்..! மகளின் நிலையால் கதறித் துடிக்கும் ஏழைத் தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் மூளைக் காய்ச்சலால் போராடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சில தனியார் அமைப்புகள் பணஉதவி செய்ததை அடுத்து வெற்றிகரமாக முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


5 வயது மகள் தவதி மூளைக் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும், அவளுடைய பிறந்த நாள் வருவதற்குள் உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் அவரது தாய் தீபிகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஒரு தனியார் இதழின் வாசகர்கள் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது தவதிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை, மருந்து, மாத்திரை என அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து சில தனியார் தொண்டு அமைப்புடன் சேர்ந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

தற்போது ஓரளவு குணம் அடைந்த தவதி வாய் திறந்து பேசுகிறாள். நிறைய ஹோம் ஒர்க் இருக்கிறது. பள்ளிக்கூடம் போகவேண்டும் என அழும் குழந்தையை பார்த்து தாய் தீபிகா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். தற்போது தவதிக்கு ரேடியேஷன் சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் தவதியின் 2 கண்களின் கருவிழிகளும் கீழே பார்த்தபடியே இருப்பதால் அசைக்க முடியவில்லை.

அதற்காக ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கண் ஆபரேஷனும் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் குழந்தை பழைய நிலைமைக்கு வந்துவிடுவாள் என கூறுகிறார் தாய் தீபிகா.