கர்ப்பம் தரித்த மனைவி! மாயமான புதுக் கணவன்! தேடி அலைந்த மணமகள் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் சக்ரவர்த்தி என்பவருக்கும் குரோம்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


மனைவி கர்ப்பம் தரித்துள்ள நிலையில் தன்னை விட மாமியார் வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என நினைத்து மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு திரும்பினார் சக்ரவர்த்தி. பின்னர் நீண்ட நாட்களாக மனைவி தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கணவர் வீட்டில் விசாரிக்க சக்ரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை மனைவிக்கு கூட சொல்லாமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் கணவரை தேடியபோது கூடுவாஞ்சேரியில் சுமனா குட்வில் ஹோமில் ஸ்டீபன் சக்ரவர்த்தி இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த இல்லம் குடிபோதையில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஹோம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்டீபன் சக்ரவர்த்தி அங்கிருந்து மீட்கப்பட்டார்.

மதுப்பழக்கம் இல்லாத தன்னை எதற்காக இங்கு சேர்த்தார்கள் என்று தெரியவில்லை என்று ஸ்டீபன் சக்கரவர்த்தி தெரிவித்தார். அது மட்டுமின்றி 20 நாட்களாக கைகால்களை கட்டிப்போட்டு அடித்து உதைத்ததாகவும், சாப்பாடு போடாமல், ஆனி மற்றும் ஒரு மெல்லிய கம்பியை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்ததாகவும் ஹோம் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார் சக்ரவர்த்தி.

மேலும் தன்னைப் போலவே 50க்கும் மேற்பட்டோர் சித்ரவதைக்கு ஆளாகி வருவதாகவும் கூறினார். பின்னர் சக்ரவர்த்தியை ஸ்கேன் செய்து அவரது வயிற்றில் ஆனி, கம்பி இருப்பதற்கான ஆதாரங்களுடன் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் சக்ரவர்த்தியின் மனைவி புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ஹோம் உரிமையாளர் அப்துல் சலாம் மற்றும் மேலாளர் சுப்ரமணி இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.