சந்திரனில் இறங்குகிறது சந்திரயான் 2 - ராத்திரிக்கு காத்திருங்கள்!

இன்று ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் 2 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உலகம் ஆச்சர்யத்துடனும் அச்சத்துடனும் பார்த்து வருகிறது.


ஏனென்றால், இதுவரை யாரும் தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது சந்திரயான் 2. இன்று ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் 2 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உலகம் ஆச்சர்யத்துடனும் அச்சத்துடனும் பார்த்து வருகிறது.

ஏனென்றால், இதுவரை யாரும் தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது சந்திரயான் 2.  இன்று இரவு இந்த சாதனை நிகழ்த்தப்படவிருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்குப்பின் நிலவில் பாதுகாப்பான தரையிறங்குதல் செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். ஏற்கெனவே சந்திரயான் 1 நிலவில் கிராஸ் லேன்டிங் செய்திருக்கிறது என்றாலும் இதுவே சவாலானது.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விக்ரம் எனப்படும் லேண்டர் சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிந்தது. இதற்குப் பின், விக்ரம் லேண்டர் இரண்டு சுற்றுப்பாதைகள் சுற்றி சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகியுள்ளது. சந்திரயான் -2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும்.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கெனவே செய்திருந்தாலும் இந்த சாப்ஃட் லேண்டிங் சவாலான பணிதான். இஸ்ரேலின் விண்கலம் எல்லாம் சரியாகச் செய்து இதில்தான் தோல்வியைச் சந்தித்தது. இதுமட்டுமல்லாமல் விக்ரம் லேண்டர் யாரும் செல்லாத அளவு தெற்குப் பகுதியில் தரையிறங்கவுள்ளது. விண்கல் தாக்கத்தால் மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பகுதி இது.

இதனால் தரையிறங்கும்முன் அந்தப் பகுதியை ஆராய்ந்து அதன்பின்தான் எங்கே தரையிறங்கலாம் என்பது முடிவெடுக்கப்படும். நிலவின் பரப்பை நோக்கி மிகவேகமாக வரும் இந்த லேண்டர், விநாடிக்கு 2 கிலோமீட்டர் அளவுவரை எட்டும். இறுதி நேரத்தில் விக்ரம் லேண்டரில் இருக்கும் கருவிகள் சரியான எதிர் சக்தியைக் கொடுத்து வேகத்தைப் பூஜ்யத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இது துல்லியமாக நடந்தால்தான் தரையிறங்குதல் சரியாக நடக்கும். இந்த இறுதி 15 நிமிடங்கள்தான் இந்த மொத்த மிஷனின் மிகச் சவாலான நிமிடங்கள். இது வெற்றிகரமாக நடந்துவிட்டால் ப்ரக்யான் என்னும் ரோவர் லேண்டரிலிருந்து வெளிவந்து நிலவின் பரப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும். இன்று நரேந்திரமோடி இந்த காட்சியை பார்க்க ஆவலாக காத்திருக்கிறாராம், நாமும் பார்த்து பாராட்ட தயாராக இருப்போம்.