கொட்டிய மழை! கை எடுத்து கும்பிட்ட உறவினர்கள்! சுடுகாட்டில் தலித் சடலத்துக்கு நேர்ந்த பரிதாபம்!

மதுரையில் பட்டியலினத்தை சேர்ந்தவரின் இறந்த உடலை பொது மயானத்தில் வைத்து எரிப்பதற்கு மாற்று சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொட்டும் மழையில் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி இறந்தவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை திருமங்கலம் தாலுகா பேரையூர் அருகே உள்ள சுப்புலாபுரம் பகுதியில் அதிக அளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மற்றும் மாற்று சாதியினரும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை பொது மயானத்தில் வைத்து தகனம் செய்ய மாற்று சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பட்டியலிஇனத்தைச் சேர்ந்த ஒரு நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அப்போதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் மயானத்திற்கு எதிரே உள்ள வெட்டவெளியில் வைத்து உடலை எரிக்க முயன்றுள்ளனர். அப்போது மழை அதிகமாக பெய்ததால் உடலை எரிக்க முடியாத நிலை வந்துள்ளது. 

இந்நிலையில் அவரது உடலை மயானத்தில் வைத்து எரிக்க அனுமதி கேட்டுள்ளனர்.இதற்கு மறுப்பு தெரிவித்த மாற்று சாதியினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பட்டியலினத்தவர்கள் இறந்த உடலை கொட்டும் மழையில் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி வேதனையுடன் இறுதி சடங்கை முடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கத்திடம் தங்களுக்கு என தனி மயானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.