அதிவேகம்! திடீரென பிடித்த பிரேக்! தலைகுப்புற கவிழ்ந்த கார்! பின்னால் வந்த 6 வாகனங்களுக்கு நேர்ந்த விபரீதம்!

அதிவேகமாக சென்ற கார் நிலைதடுமாறியதில் ஒன்றன் பின் ஒன்றாக 6 வாகனங்கள் மோதிய விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் எனுமிடம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை அச்சிறுபாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதி வேகத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேகமானது அதிகமாக இருந்ததால் கார் நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்தது. 

விபத்துக்குள்ளான காருக்கு பின் வந்த 3 கார்கள், 2 பேருந்துகள் மற்றும் ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தன. முதலில் சென்ற கார் திடீரென்று பிரேக் அடித்ததால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி கொண்டன. அச்சிறுபாக்கத்தில் நடுரோட்டில் இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. வாகனங்களில் பயணித்து கொண்டிருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக சாலை நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெரிசலாக இருந்த சாலைப்போக்குவரத்தை சரி செய்தனர். திடீரென்று ஏற்பட்ட சாலை விபத்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.