கும் இருட்டு! ஆள் அரவமற்ற சாலை! தனிமை! நடிகைக்கு டாக்சி டிரைவரால் நேர்ந்த விபரீதம்!

கடந்த வருடம் வெளியாகி பெரும் ஹிட்டடித்த திரைப்படம் lipstick under my burkha. இந்த திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஆஹ்னா கும்ரா.


இவர் சமீபத்தில் சிம்லாவில் உள்ள தனது படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார். போக்குவரத்து வசதியில்லாத சிம்லாவில் செல்லும்போது அருகில் உள்ள நகரத்தில் இருந்து makemytrip அப்ளிகேஷன் மூலம் டாக்ஸி புக் செய்து சென்றிருக்கிறார். தனது இடத்தை அடைந்தவுடன் அப்ளிகேஷன் மூலம் டிரைவருக்கு தேவையான பணத்தை செலுத்தி உள்ளார்.

ஆனால் செலுத்திய பின்னரும் அந்த அப்ளிகேஷனில் பணம் இன்னும் வரவில்லை என டிரைவர் இந்த நடிகையை சிறை பிடித்துள்ளார். பல மணி நேரங்கள் வரை அவருடன் வாக்குவாதம் செய்து கண்டிப்பாக உங்களை விட மாட்டேன் என்னுடைய அப்ளிகேஷனில் இன்னும் பணம் வந்து சேரவில்லை என அவரை சிறைப்பிடித்து டாக்ஸியில் ஏற்றி உட்கார வைத்து உள்ளார் அந்த டிரைவர்.

பின்னர் பல மணி நேரங்கள் கழித்து தனது அப்ளிகேஷனில் பணம் வந்தவுடன் நடிகையை அனுப்பியுள்ளார் டிரைவர். இந்த சம்பவத்தால் கடுப்பான ஆஹ்னா கும்ரா make my trip அப்ளிகேஷனை கடுமையாக சாடி தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இப்படி ஒரு மோசமான கஸ்டமர் சர்வீஸ் நான் பார்த்ததில்லை. செல்லும் பெண்களை எல்லாம் இவ்வாறு டிரைவர்கள் சிறை பிடித்து விட்டு வைத்து விட்டால் என்ன பாதுகாப்பு இருக்கிறது. யாரும் makemytrip அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம் என கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.