பைபாஸ் சாலையில் அலட்சியம்! கிராஸ் செய்யும் போது மோதி தூக்கிய கார்..! டூ வீலரில் கோவிலுக்கு சென்ற 2 பேர் பலி!

கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான சம்பவம் கடலூர் அருகே நேர்ந்துள்ளது.


விழுப்புரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது நண்பருடன் மயிலம் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் மயிலம் அருகே உள்ள செண்டூர் பகுதியில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திரும்ப முயற்சித்த போது, திடீரென திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது.

இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றனர். காரும் மிகவும் சேதமுற்றதால் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலை போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

உயிரிழந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சீனிவாசன் உடன் வந்திருந்த நண்பர் கடலூர் காட்டுமன்னார் அருகே உள்ள கிராமத்தை சென்ற மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.