அசுர வேகம்..! திடீரென பிடிக்காமல் போன பிரேக்..! சாலையோர மரத்தில் மோதிய கார்..! சடலமாக வெளியே விழுந்த 2 பேர்!

ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு காரில் சென்ற ஆந்திரவை சேர்ந்த 2 பெண்கள் ராணிப்பேட்டை அருகே இன்று அதிகாலை சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது.


மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கா ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த முருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். மற்றும் அவரது மனைவி விஜயா. அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி , பிரேமா, சாமுண்டீஸ்வரி ஆகியோர் இன்று அதிகாலை காரில் சென்றனர்.

 முருக்கம்பட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர் காரை ஓட்டினார். புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்த உள்ள நெல்லிக்குப்பம் மற்றும் மோட்டூர் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது.

இந்த தடுமாற்றத்தினால் கார் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் அதிவேகமாக மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயா, ராஜேஸ்வரி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிரேமா, சாமுண்டீஸ்வரி, கார் டிரைவர் அஜித்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

அதிகாலை என்பதால் மக்கள் அதிகமாக தென்படுவில்லை, பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், சிப்காட் ஆய்வாளர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விஜயா, ராஜேஸ்வரி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விப்பத்தின் காரணமாக அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.