அசுர வேகத்தில் சென்ற கார்..! மோதிய வேகத்தில் மேலே ஏறிய பஸ்..! நொடியில் பறிபோன 4 உயிர்! பதற வைக்கும் விபத்து!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்.


இவர் தனது குடும்பத்தினருடன் காரில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். இவரது கார் வைக்கம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த பேருந்து இவர்களது கார் மீது மோதியதில் உள்ளே இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்து அதிகாலை 5 மணி அளவில் நேர்ந்துள்ளது. இதுகுறித்து அருகில் இருந்த காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது எதிரே வந்த பேருந்து அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கின்றனர். 

இதன் அடிப்படையில் பேருந்து ஓட்டுனரை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்ததால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது.