ரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார்! கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு!

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பிறந்த நாள் பரிசாக ரூ.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார் வழங்கப்பட்டுள்ளது.


விஜயகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் சந்தித்து விஜயகாந்தை வாழ்த்தி வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கூட விஜயகாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் தேமுதிக் தலைமை அலுவலகம் வந்தனர்.

அவர்களும் விஜயாந்தின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த கார் சாவி ஒன்றை விஜயகாந்திடம் கொடுத்தனர். அந்த கார் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரை மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் இணைந்து விஜயகாந்திற்கு பிறந்த நாள் பரிசாக அளித்தனர். அந்த காரின் விலை ரூ.60 லட்சம் என்று சொல்கிறார்கள்.

மகன்கள் இருவரும் சேர்ந்த ரூ.60 லட்சத்தில் தந்தைக்கு காரை பரிசாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த கார் வைரல் ஆகி வருகிறது.