ஓசூரில் பற்றி எரிந்த சொகுசுப் பேருந்து! பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவரின் சாமர்த்தியம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே தனியார் சொகுசு பேருந்து நடுரோட்டில் பற்றி எரிந்தது.


பெங்களூரில் இருந்து திருப்பூர் நோக்கி ஷர்மா என்ற நிறுவனத்தின் சொகுசு பேருந்து சுமார் 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. கர்நாடக எல்லையை கடந்து தமிழக எல்லைக்குள் வந்த அந்த பேருந்து ஓசூரை நெருங்கியது.

அப்போது சூளுகிரி எனும் இடத்தில் பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். மேலும் பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் என்ன ஏது என்று தெரியாமல் அலறி அடித்து இறங்கினர். பின்னர் பேருந்து பற்றி எரிய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 20 பயணிகளும் உயிர் தப்பினர்.