காதலில் விழுந்த தங்கை! கண்டுபிடித்த அண்ணன்! பிறகு நேர்ந்த பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

திருச்சி மாவட்டம் காஜாப்பேட்டை பகுதியில் தங்கையின் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்த அப்பெண்ணின் சகோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருச்சி மாவட்டம் காஜாப்பேட்டை அடுத்துள்ள பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன், இவர் அங்குள்ள ஒரு  தனியார் ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்துள்ளார். அந்தப்பகுதியில் வசிக்கும் வினோத் என்பவரின் தங்கைக்கும் இவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் நன்றாக பழகி வந்த நிலையில் இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்களின் காதல்  சில நாட்களுக்கு முன்னர்  பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து

இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அப்பெண்ணின் சகோதரர் வினோத், அவர்களது காதலை கைவிடும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது. நேற்று வேலை முடிந்து சத்தியநாராயணன் தனிமையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வினோத் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மற்றும் தனது தங்கையுடன் ஆனால் காதலை முறித்துக் கொள்ளும்படியும் வினோத்தை மிரட்டியுள்ளனர்.

.சத்யநாராயணன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் காதலை கைவிட முடியாது எனவும் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த வினோத் அருகில் உள்ள பீர் பாட்டிலை எடுத்து உடைத்து சத்யநாராயணன் கடுமையாக தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்களும் சத்தியநாராயணன் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். இந்நிலையில் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயங்களுடன் இருக்கும் சத்யநாராயணனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யநாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சத்யநாராயணனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் வினோத் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.