அக்காவை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி! நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் அக்காவை தம்பியே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கனிமொழி மற்றும் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. முதுகலை படித்துள்ள கனிமொழி வேன் டிரைவரான லெனினை திருமணம் செய்ததை மனக்குறையாக கொண்டுள்ளார்.

இந்த கருத்து வேறுபாடு காரணமாக கனிமொழி அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். கடந்த வாரம் கனிமொழி பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது அவளின் பெற்றோர் கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறி உள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கனிமொழி தனது கணவர் வீட்டிற்கு போகாமல் பெற்றோருடனே தங்கிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கனிமொழியின் சகோதரர் சுந்தரபாண்டியன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த கனிமொழியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே கனிமொழி மரணமடைந்தார். பின்னர் சுந்தர பாண்டியன் நெல்லை டவுன் ஸ்டேஷனில் கொலையை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கா திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த காரணத்தினால் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் தவறாக பேசியதாக சுந்தரபாண்டியன் கூறினார். இதனை அடுத்து அக்காவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக கூறி அதிர வைத்துள்ளார் சுந்தரபாண்டியன்.