திருமணத்திற்கு இடையூறு! தங்கையின் முன்னாள் காதலனுக்கு பெண்ணின் அண்ணன் கொடுத்த தரமான தண்டனை!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனது சகோதரியின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது முன்னாள் காதலனை அடித்துக் கொன்ற சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.


புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் என்ற இடத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் சந்தோஷ் சவுத்ரி. இவரது சகோதரிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனான  22 வயது யுவக் வாக்மேர் என்பவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

 

யுவக் வாக்மேரை சந்தோஷின் தங்கை தொடக்கத்தில் காதலித்தாலும் பின்னர் அவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து விலகினார். எனினும் யுவக் வாக்மேர் அந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய விரும்பியதாகக் கூறப்படுகிறது.

 

எனவே சந்தோஷை சந்தித்து அது குறித்து பேச திட்டமிட்ட யுவக், மகாசின் சவுக் என்ற இடத்தில் அஜிங்க்யா என்ற ஹோட்டலுக்கு வெளியே சந்தோஷின் தாம்பூலக் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரைச் சந்தித்தார்.

 

இருவரும் அது குறித்துப் பேசிய போது வாக்குவாதம் வலுத்து தகராறாக முற்றியது. ஆத்திரமடைந்த சந்தோஷ், ஒரு இரும்புக் குழாயால் யுவக்கின் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் சந்தோஷ் சவுத்ரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்