ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் தான் சாப்பாடு..! உடல் மெலிய இளம் பெண் எடுத்த விபரீத டயட்..! ஆனால் நடந்தது?

லண்டன்: உடல் எடையை குறைக்க முயன்ற சிறுமிக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் பெல்ஃபாஸ்ட் பகுதி சேர்ந்தவர் மாடசன் ஃபால்கர். 16 வயதான இவர்,  கொழு கொழுவென சில மாதங்களுக்கு முன்பு வரை அழகாக இருந்துள்ளார். ஆனால், தர்பூசணி போல இருக்கிற, எனக் கூறி தோழிகள் கிண்டல் செய்ததால், தனது எடையை குறைக்க மாடசன் தீர்மானித்தார்.

இதன்படி, அதிரடியாக சில புளிப்பு மிட்டாய்கள் மற்றும் அரை பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் முழுக்க டயட் பின்பற்றியுள்ளார். கிட்டத்தட்ட மாதக்கணக்கில் இப்படி விடாப்படியாக, மிட்டாய் சாப்பிடுவதும், அரை பிஸ்கட் சாப்பிடுவதும் அவரது வழக்கமாக இருந்துள்ளது. அதேசமயம், வேறு எந்த உணவையும் அவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

இதனால், உடல் எடை குறைந்தாலும், அவர் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டதோடு,  ஒருகட்டத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி, அங்கேயே மயக்கம் போட்டு விழ, ஒரே ரணகளமானது. பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்ததில் சிறுமிக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.  

தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமி இதுபற்றி ஊடகங்களிடம் பேசுகையில், ''குண்டாக இருப்பதால் கேலி செய்யப்படுவதை தடுக்க, டயட் பின்பற்றினேன். ஆனால், அது விபரீதமாக மாறி ஊட்டச்சத்து குறைந்து தற்போது கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் எனது தோழிகள்தான் காரணம். அவர்களின் பேச்சைக் கேட்டு என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது,'' என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.