60 வருட திருமண வாழ்க்கை! நொடியில் நேர்ந்த விபரீதம்! சிறையில் மனைவி..! ஆனால் கணவன்..? பதற வைக்கும் சம்பவம்!

பிரிட்டனில் புற்றுநோயால் கணவர் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மனைவி அவருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.


1958-ம் ஆண்டு டென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. சுமார் 85 வயதை கடந்துவிட்ட டென்னிஸ் எக்லெஸ்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த 80 வயதான மனைவி மாவிஸ் 60 வருடமாக ஒன்றாக காதல் வாழ்க்கை வாழ்ந்தது போல் மரணத்திலும் பிரியக்கூடாது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ளலாம் என கணவரிடம் கேட்க அவரும் சம்மதித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்துள்ளனர். ஆனால் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்குப்பின் மனைவி உயிர் பிழைத்துவிட்டார். பின்னர் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்த நிலையில் சற்று நேரத்தில் விஷத்தின் தாக்கம் காரணமாக கணவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். இதையடுத்து மனைவி கைதுசெய்யப்பட்டார். 

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கணவர் வலியால் படும் துன்பத்தை பார்க்க முடியவில்லை என்றும், அவருக்கு விடுதலை அளிக்கவே இந்த முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார்.

டென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் இருவரும் மருத்துவமனையில் இறுதியாக இணைந்திருந்த புகைப்படத்தை மகள் ஜாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இந்த போட்டோவை பதிவிடவதாக தெரிவித்தார் ஜாய்.