2 கைகளும் கிடையாது..! மகனுக்கு பால் புகட்ட வேண்டும் என்பதற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! தாய்மையை மிஞ்சிய தந்தை பாசம்!

லண்டன்: மூளைக் காய்ச்சல் பாதித்த தந்தை, மகனை பராமரிப்பதற்காக, செயற்கை கை பொருத்திக் கொண்டார்.


பிரிட்டனில் உள்ள துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் டேனி ஃப்ளோரன்ஸ். 26 வயதான இவர், குழந்தையிலேயே மூளைக்காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனால், இரண்டு கால்கள் மட்டுமின்றி, வலது கையையும் இழந்துவிட்டார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தனது மகனுக்கு ஒரு வயதாகும் நிலையில், தன் கையால் சுமந்து, உணவூட்டி பராமரிக்க டேனி மிகவும் ஆசைப்பட்டார்.

இதன்பேரில், கால்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வலது கை இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்த அவர், பெரும் போராட்டத்தின் பலனாக, பயோனிக் முறையில் செயற்கை கை தற்போது பொருத்திக் கொண்டுள்ளார். ரோபோ கை போல இருந்தாலும், வலது கை உதவியுடன் மகனுக்கு உணவூட்டவும், குளிக்க வைக்கவும் முடிகிறது என்று, டேனி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

உலக அளவில் பலரும் பயோனிக் முறையில் செயற்கை கை பொருத்த தொடங்கியுள்ளனர். அதில், டேனியின் கதை சற்று நெகிழ்ச்சியானது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.