வரதட்சணை வாங்க மறுத்த மணமகனுக்கு பெட்டி பெட்டியாக சர்ப்ரைஸ்! மணமகள் வீட்டார் அசத்தார்!

வரதட்சிணையை மறுத்த ஆசிரியர் மணமகனுக்கு அவர் விரும்பும் புத்தகங்களைக் கொடுத்து பெண் வீட்டார் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.


வரதட்சணைக்காக சிலிண்டர்கள் வெடிக்கும்  காந்தி தேசம் இது. வரதட்சணைக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப நாங்க வாங்குறது இல்லை.  நீங்களா பார்த்து பொண்ணுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க என சூசகமாக கேட்பவர்களும் உண்டு. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சூர்யகாந்தா பாரிக்குக்கும் பிரியங்கா பேஜ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. தொடக்கத்திலேயே வரதட்சணை வேண்டாம் எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் சூர்யகாந்தா. 

இந்நிலையில் திருமணத்தன்று சூர்யகாந்தாவுக்கு வரதட்சணைக்குப் பதிலாக ஆயிரம் புத்தகங்களைத சர்ப்ரைஸாகக் கொடுத்தனர் பெண்ணின் பெற்றோர். ஆயிரம் புத்தகங்களின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய். தனது பெற்றோருக்கு வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு இல்லை என்றும் சூர்யகாந்தாவுக்கும் அது பிடிக்காது என்றும் தெரிவித்த மணமகள் ப்ரியங்கா, சூர்யகாந்தாவின் குணத்தைப் பாராட்டி, அவருக்குப் பிடித்த ஆயிரம் புத்தகங்களை தனது பெற்றோ பரிசளித்ததாகக் கூறினார்.

தானும் அதிகமாக புத்தகம் படிக்கக் கூடியவள் என்பதால் தனது தந்தை புத்தகங்களை தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.