சென்னை ஷாப்பிங் மாலில் பிராவோ செய்த தரமான சம்பவம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தற்போது ipl போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று அதன் இறுதி கட்டதை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான பிராவோ இன்றைய தினம் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யு மாலில் வலம் வந்தார்.


இவர் இவ்வாறாக வருகை தருவது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது  என்றே சொல்லலாம். பிராவோ இன்று எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிற்கு வந்த போது அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்து அவரை உற்சாக படுத்தினர். 

மேலும் பிராவோ  மாலினுள் நடந்து வந்த போது சிறப்புமிக்க சாம்பியன் பாடல் ஒன்று இசைக்க பட்டது குறிப்பிடத்தக்கது. பின்பு அவர் தன்னுடைய ரசிகர்களுடன் மிகுந்த அன்புடன் சிறிது நேரம் உரையாடினார். அது மட்டுமில்லாமல் அவர்களுடன் இணைந்து செலஃபீயும் எடுத்து கொண்டார்.

பின்பு பேசிய பிராவோ , csk அணிக்கு இரண்டு  ஆண்டுகள் தடை  விதிக்கப்பட்டு   விளையாட போதும் கடந்த ஆண்டு எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவு மற்றும்  உற்சாகம் தான்  கோப்பையை வெல்ல வழிவகுத்தது .  அதே உற்சாகம் தான் எங்களை இந்த ஆண்டும் வெற்றிபெற வைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.