இன்குபேட்டரில் தீவிர சிகிச்சை! பச்சிளம் குழந்தை தவறி விழுந்து ஏற்பட்ட விபரீதம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பிரேசிலில் அமைந்துள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட குழந்தை ஒன்று தவறி கீழே விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது.


பிரேசிலில் அமைந்துள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ராபர்டோ மக்காடோ எனப் பெயரிடப்பட்ட 3 மாதக் குழந்தை ஒன்று உடல் நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. ராபர்டோ மக்காடோவின் பெற்றோர் ராபர்டா- ஜெசிகா .  

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இன்குபேட்டரில் குழந்தையை வைத்து செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், செவிலியர் மற்றொரு கர்ப்பிணி தாயை கவனிக்க சென்றுள்ளார், பின்னர் குழந்தை காலை உதைத்தபோது, இன்குபேட்டரின் சிறிய பூட்டு திறந்து கொண்டது. இதனை கண்ட செவிலியர் ஓடி வருவதற்குள், குழந்தை தரையில் விழுந்து குப்புற கவிழ்ந்தது. செவிலியர்கள் பதற்றத்துடன் குழந்தையை தூக்கி முதலுதவி அளித்தனர்.

 நடந்த சம்பவத்தினை அறிந்த பெற்றோர்கள் மருவத்துவர்களையும், செவிலியர்களையும் வசம் மாறியாக சாடியுள்ளனர். பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர்களிடம் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை, ஆனால் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடந்து, இன்குபேட்டரின் இரண்டு கதவுகளில், ஒருப்பக்கம் மட்டுமே செவிலியர் லாக் பண்ணியதாக ராபர்டோ மக்காடோ பெற்றோர் குற்றஞ்சாட்டினார். இதனை மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

வழக்கின் விசாரணையில், கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைக்கு எவ்வித பிரச்சனைகள் இன்றி நலமுடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், மருத்துவமனையின் சார்ப்பில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து வருகின்றன.