காதலியை கொலை செய்து கர்ப்ப பையை வெளியே எடுத்த காதலன்..! உடந்தையாக இருந்த தந்தை! சென்னையை உலுக்கிய சம்பவம்!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது கர்ப்ப பையை அகற்றிய பெரும்பாக்கம் ஏரியில் தூக்கி எரிந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன்தினம் காவல்துறையிக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில் பெரும்பாக்கம் ஏரியில், தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

காவல்துறையினர் விசாரணையில், இறந்த கர்ப்பிணி பெண் சித்தாலப்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் என்றும் இவர் பெயர் ஹென்றி ஜெயசிங் என்றும் தெரிய வந்தது. மேலும், இறந்தவர் சம்பவத்தன்று நண்பர்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மற்றும் வனத்துறை குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் சேவியர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், ஹென்றியின் நகைக்காக, சேவியர் அருள், தன் மகன் மைக்கேல் விஜய்,அமல்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர், சேவியர் அருளிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சில மாதங்களுக்கு முன், இளம்பெண் ஒருவர் கொலை செய்த திடுக் தகவலும் வெளியானது. மேலும், மூன்று மாதங்களுக்கு முன் இதே ஏரியில் கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், இளம்பெண் உடலை காவல்துறையினர் மீட்டனர். முதலில் இறந்தது திருநங்கை என கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு பின், பெண் என்பது ஊர்ஜிதமானது. ஆனா கொலைக்கு காரணம் தெரியவில்லை.

இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சபானா என்பதும், அவரை தன் மகனுடன் சேர்ந்து, சேவியர் அருள் கொலை செய்ததும் தெரியவந்தது. சபானா சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் பணியாற்றி வந்த போது மைக்கேல் விஜய்க்கு,

சபானாவுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார் பின்னர் சில காலத்தில் இது காதலாக மாறியது. இவரின் காதல் சபானா கருவும் அளவிற்கு சென்றது. இதையடுத்து, மைக்கேலை திருமணம் செய்யக்கோரி வற்புறுத்தினார். இதற்கு சேவியர் அருள் மறுத்தார்.

பின்னர், சபானாவின் தொல்லை தாங்காமல் கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, சபானாவிடம் திருமணம் பற்றி பேசவேண்டும் என, பெரும்பாக்கம் ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை மயக்கமடைய செய்து பின்னர் கொலை செய்தனர். காவல்துறைக்கு பயந்து அவரது அடையாளத்தை மறைக்க கர்ப்ப பையை எடுத்ததும் விசாரணையில்தெரியவந்தது.

இவ்வற்றை அறிந்த காவல்துறையினர், இந்த கொலை வழக்கில் சேவியர் அருள், அவரது மகன் மைக்கேல் விஜய் மற்றும் அவரது நண்பர் நண்பர் அமல்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை ஒரு சவரன் தங்கச் செயின் ஆட்டோ போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.