ஒரு மாதிரி பேசுறார்..! கண்ட இடங்கள்ல தட்டுறார்..! தாவரவியல் வாத்தியாரின் லீலைகள்! வீதிக்கு வந்த இளம் மாணவிகள்!

கோழிக்கோடு: பாலியல் தொல்லை தரும் ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, கேரள பள்ளி மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல் பாட ஆசிரியராக பணிபுரிபவர் கிருஷ்ணன் நம்பூதிரி. இவர் தனது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒன்று சேர்ந்து கடந்த 2019 அக்டோபரில் கோழிக்கோடு மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, திங்கள்கிழமை முதலாக, மாணவிகள், பள்ளி வளாகம் முன், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலையில் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது.

எனினும், அவரை கைது செய்தால் மட்டுமே, மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என, ஹிமாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் குறிப்பிடுகின்றனர்.