பிறந்தது ஃபானி! கொட்டும் மழைக்கு இடையே ஜனித்த குழந்தைக்கு புயல் பெயர்!

புயல் கரையை கடந்த போது பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் சூடடியுள்ளனர்.


கடந்த பத்து நாட்களாக 4 மாநிலங்களை ஃபானி புயல் அச்சுறுத்தி வந்தது. ஒரு வழியாக அந்த புயல் இன்று ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. 

ஃபானி கரை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஒடிசா முழுவதும் பலத்த மழை பெய்தது. தலைநகர் புவனேஸ்வரிலும் கூட கனமழை சூறாவளிக்கு இடையே மழை கொட்டியது.

இந்த புயலின் போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்து. உடனடியாக அவருக்கு சக பெண்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை பார்த்த பலரும் அந்த குழந்தைக்கு ஃபானி என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

அந்த வகையில் பொதுமக்களை அச்சுறுத்திய ஃபானி புயல் தன்னையும் அச்சுறுத்தியதால் தனது குழந்தைக்கு அதே பெயரை வைப்பதாக அந்த பெண்மணி கூறினார். அந்த வகையில் கரையை கடந்த பிறகும் ஒடிசாவில் ஒரு ஃபானி பிறந்துள்ளது.