வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தான் குறி..! ஐயப்ப சாமி வேடத்தில் தகாத செயல்..! சென்னை பரபரப்பு!

சென்னையில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, மிரட்டி பணம் பறித்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பீமேஸ்வரர் நகர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து 5 நபர்கள் வீடுவீடாகச் சென்று காணிக்கை வசூல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்திற்கும் சென்று காணிக்கையாக பணம் மற்றும் பொருட்களை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் தனியே இருந்த பெண் ஒருவரிடம் இவர்கள் பணம் வசூலிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்மணி பணம் தர மறுத்ததாக தெரிகிறது.இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அப்பெண்ணை மிரட்டி அவரிடமிருந்து பணம் கேட்டுள்ளனர்.இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே ஒன்று கூடி அவர்களை மடக்கிப் பிடித்தனர். இருந்தும் 5 பேரில் 2 நபர்களை மட்டுமே அவர்களால் பிடிக்க முடிந்தது மற்றும் இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் மூவரையும் தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்றும் பொதுமக்களுக்கு இவ்வாறாக காணிக்கையாக பணம் மற்றும் பொருட்கள் கேட்டு வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.