4 மாநிலங்களில் பாஜக ஜீரோ! மோடி - அமித்ஷா கூட்டணிக்கு ஷாக்!

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருந்தாலும் நான்கு மாநிலங்களில் அக்கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.


நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியிட்ட 470 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மோடி அமித்ஷா உள்ளிட்டோர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அசத்தினார்.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, இமாச்சல் ஆகிய மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்றது. ஆனால் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

என்னதான் வட மாநிலங்களில் பாஜக விஸ்வரூபம் வெற்றி பெற்று இருந்தாலும் தன் மாநிலங்களைப் பொறுத்தவரை அந்த கட்சியின் பாட்சா பலிக்கவில்லை.