பிரியாணிக் கடையைவிட மோசமா இருக்கே, பா.ஜ.க.வின் அபின் வியாபாரம்?

பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் தி.மு.க.வினர் வம்பு வளர்ப்பதாக வரும் செய்திகளை மிஞ்சும் வகையில் அபின் வியாபாரம் செய்வதற்கு பா.ஜ.க. கட்சியை பயன்படுத்தும் நிர்வாகி பற்றி வரும் செய்தி அதிர வைத்துள்ளது.


பிஜேபி பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர், மற்றும் OBCஅணி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ அடைக்கலராஜ், திருச்சி அருகே 2 கிலோ அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டதை அடுத்து தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க.வினர் இப்போது முருகன் கையில் இருக்கும் வேலை வைத்துதான் பரப்புரை செய்து வருகின்றனர். அதேபோன்று காரில் வேல் வைத்துகொண்டு பயணம் செய்த நேரத்தில்தான், தமிழக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் 2 கிலோ அபினோடு பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ அடைக்கலராஜ் பிடிபட்டுள்ளார். 

இவரிடம் பிடிபட்டுள்ள அபின் மதிப்பு 4 கோடி ரூபாய் பெறும் என்கிறார்கள். எது எதற்கோ வாய் பேசிவந்த பா.ஜ.க.வினர் இதுவரை வாயே திறக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். பிரியாணிக் கடையைவிட மோசமா இருக்கே அபின் வியாபாரம்.