நடிகைகளை வைத்து மார்க்கெட்டிங்! ஸ்டெர்லைட் தொடர்பு! ஜக்கியின் காவிரி கூக்குரல் பிராடுத்தனமா? வைரலாகும் வீடியோ!

சேலம்: ஜக்கி வாசுதேவ் செய்யும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பியூஸ் மானுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ், சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா அறக்கட்டளை  செய்துவரும் ஊழல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறார். இதன் அடிப்படையில், சுமார் 4 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பியூஸ் மானுஷ் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ''காவேரி கூக்குரல் எனச் சொல்லிட்டு, மக்களின் பணத்தை ஜக்கிவாசுதேவ் சுரண்டி ஏமாற்ற தொடங்கியுள்ளார். அவரை நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். உங்களின் பிராடுத்தனத்தை குறைத்துக் கொள்ளுங்கள் ஜக்கி அவர்களே,'' என பியூஸ் மானுஷ் காரசாரமாக விமர்சித்து பேசுகிறார்.  

மேலும் காவேரி கூக்குரல் நன்கொடையை நிர்வகிக்கும் குழுவில் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் ஷேர் ஹோல்டர் அஜித் பர்சாயத் அந்த போர்டில் இருப்பதாகவும் பியூஸ் மானுஷ் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.