நள்ளிரவு! தனிமையில் காதலன் - காதலி! கையும் களவுமாக பிடித்த ஊர் மக்கள்! பிறகு அரங்கேறிய இன்பமான சம்பவம்!

பீகாரில் காதலியை பார்க்க சென்ற காதலனை பிடித்து ஊர்மக்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டம் கோணிஹ்யா என்ற கிராமத்தைச் சேர்ந்த சாஹிப் என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி கிராமத்தின் வெளிப்புறப் பகுதிகளில் சந்தித்து பேசிக் கொள்வர்.

இந்நிலையில் சாஹிப்க்கு திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் அவரது காதலியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தன் காதலியை பார்க்க கிராமத்திற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துள்ளார்.

இதனை கண்ட சில ஊர்வாசிகள் அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்தனர். பின் சாகிப் அவர் காதலிக்கும் பெண்ணுடன் ஊர் பகுதிக்கு வெளியில் செல்ல அதனை கண்டவர்கள் மற்ற ஊர் வாசிகளை திரட்டி அங்கு சென்று அவர்களை பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்று தெரிவித்த நிலையில், இருவரிடமும் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்கபட்டது.

இருவரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து உள்ளூர் பாதிரியார் அழைத்து வரப்பட்டு திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின் இச்சம்பவம் குறித்த தகவல் காவல் நிலையத்திற்குச் செல்ல சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.