பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருமகள் அழுதபடி செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கதறி அழுது கொண்டே கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா ராய்! வைரல் புகைப்படம்!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் என்பவருக்கும் ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம், திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஆறு மாதங்களிலேயே விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அனுகினார் தேஜ் பிரதாப். ஆனால் இவர்களை சேர்த்து வாழ வைக்கும் முயற்சியில் இருவீட்டார்களும் ஈடுபட்டு வந்தன. இந் நிலையில் ஐஸ்வர்யா ராய், கையில் சூட்கேஸுடன் கதறி அழுதபடி லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து வெளியேறும் காட்சி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தேஜ் பிரதாப் மீது ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அளித்த புகாரில் கணவர் தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்றும் தன்னை சிவனின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பலவகை போதை பொருட்களை உட்கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
மாட்டுத் தீவண ஊழல் வழகிக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஷ்டிரிய ஜனதா தலைவரான லாலு பிரசாத் யாதவ்வுக்கு குடும்பத்தில் மூத்தமகன் போதைக்கு அடிமையான செய்தியும், மருமகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம மேலும் அவரது குடும்பத்தினருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி உள்ளதாக பீகார் மக்கள் தெரிவிக்கின்றனர்.