பிகிலுக்கு போலி டிக்கெட்...! 500 விஜய் ரசிகர்களை திருப்பி அனுப்பிய தியேட்டர்! தூத்துக்குடி பரிதாபம்!

தூத்துக்குடியில் பிகில் படத்திற்கான போலி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்த புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து, அட்லி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், விஜய் நடித்த பிகில் படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. முதலில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது அனுமதி பெற்று பல இடங்களில் பிகில் திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிகில் படத்திற்கான போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்வதாக சர்ச்சை வெடித்தது. சிறப்பு காட்சிக்கு காட்சிக்கு சிலர் போலி டிக்கெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்பாகம் உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 பேர் போலி டிக்கெட் விற்றதை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அவர்கள் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் போலி டிக்கெட் அச்சடித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த மோகன் பாபு, ஆனந்தராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.