பிக்பாஸ் 3! சேரனுக்கு எதிராக சேரும் வலுவானக் கூட்டணி! அப்படி என்ன தான் செய்தார்?

பிக் பாஸ் வீட்டின் உறவுகள் பார்ப்பதற்க்கு ஒருவருடன் மற்றோருவர் இணக்கமாக இருப்பதாக தெரிந்தாலும், போட்டினு வந்தா அவங்க சுய ரூபத்தைக்காட்டுவது இயல்புதான்.


அந்தவகையில் பிக் பாஸ் துவங்கி 8 ஆவது நாளிலேயே முதல் எவிக்‌ஷன் அறிவிக்கபட்டதை அடுத்து, எல்லோரும் ஒருக் குறிப்பிட்ட நபரை குறிவைக்கின்றார்களா எனக்கேள்வியை எழுப்ப்பியது சேரனின் நாமினேஷன். இதில் நேற்று ஹார்ட்டின் கொடுத்து விட்டு என் அண்ணன் மற்றும் அப்பாவை ஒரு சேரப் பார்ப்பது போல உள்ளதாக பதிவு செய்த வனிதா அடுத்த் நாளே, ஆப்பு வைப்பது எல்லாம் வேற லெவல்.

சேரன் தன்னை இன்னமும் டைரக்டராகவே நினைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் ஆளுமை செலுத்துகிறார், தலைகனத்துடன் நடந்து கொள்கிறார் என ஹவுஸ் மேட்ஸ் அவர் பக்கம் திருப்பி விடும் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் நீண்டுக்கொண்டிருக்க , மற்றொருப்பக்கம் அவருக்கு எதிராக நாமினேட் செய்யும் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

இப்படி ஒட்டு மொத்த வீடும் தனக்கு எதிராக நிற்பதை உணர்ந்துக் கொள்ளாமல் சேரன் வெள்ளந்தியாய், சிரிப்பதும், இயல்பாய் நடப்பதும் தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை பெற்று தந்துள்ளது.